கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் , கவனக்குறைவாக இருந்ததால் தனக்கு கொரொனா வந்துள்ளதாக நடிகர் சென்ராயன் தெரிவித்துள்ளார்.
அதில்,நான நடிக்கவில்லை; உண்மையாகவே ஆவி பிடிக்கிறேன். வாழ்க்கையிலும் சினிமாவிலும் ஜெயிக்க வேண்டுமென எப்போதும் பாசிடிவ்வாக இருக்கும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துவிட்டது. முதலில் கவனக்குறைவாக இருந்த எனக்கு இத்தொற்று வந்துவிட்டதால் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்… எனவே நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் எச்சரிக்கையாக இருங்கள்…கொரொனா டேஞ்சரஸ் என ரசிகர்களை எச்சரித்துள்ளார்.