திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Senthil Velan
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (19:17 IST)
திருப்பதிக்கு சென்று பரிகார பூஜை நடத்தப் போவதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்த நிலையில், தனது பயணத்தை ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்துள்ளார். தனது பயணத்திற்கு சந்திரபாபு நாயுடு இடையூறாக இருப்பதாக ஜெகன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
 
மேலும், சந்திரபாபுவின் பாவத்தை போக்க திருப்பதியில் பரிகார பூஜை நடத்தப்போவதாகவும், இதற்காக இன்று (27.09.2024) திருப்பதி செல்ல போவதாகவும் ஜெகன்மோகன் அறிவித்து இருந்தார். ஆனால் ஜெகன்மோகன் வருகைக்கு  தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதனால் தனது பயணத்தை ஜெகன்மோகன் ரெட்டி ஒத்தி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் பேய் ஆட்சி நடைபெறுகிறது என்றும் திருமலை கோவிலுக்கு நான் வரவிருக்கும் பயணத்தை அரசு தடுக்க முயற்சி செய்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
 
கோவிலுக்கு செல்வது தொடர்பாக திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை  என்று போலீசார் நோட்டீஸ்  அனுப்பியுள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்தார். மேலும் லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்று அவர் குற்றம் சாட்டினார்.


ALSO READ: நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு.!!

முதல்வர் பதவிக்கு இணையான பதவி வகிக்கும் ஒருவர், கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் பிறகு தலித்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்