வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Mahendran

செவ்வாய், 11 ஜூன் 2024 (18:58 IST)
வெளிமாநில  பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதி சீட்டு பெறாமல், வெளி மாநிலங்களில் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
முறையற்ற வகையில் வெளி மாநிலத்தில் பதிவு செய்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
வெளி மாநிலத்தில் பதிவெண் கொண்ட பேருந்துகள் தமிழகத்தில் அதிகமாக இயங்குகிறது என்று தமிழக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்