ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணிக்கலாம்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (12:30 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் முன்பதிவில்லாமல் ரயில்களில் பயணிப்பதற்கான அறிவிப்பை ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ரயில் சேவைகள் சில மாதங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு முன்பதிவு மட்டுமே செய்து பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ள நிலையில் ஏப்ரல் 10 முதல் முன்பதிவில்லாமல் பயணிக்க முடியும் என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் ஏப்ரல் 16 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்