மகாபலிபுரத்தை இலவசமா சுற்றி பார்க்கலாம்! – தொல்லியல் துறை சர்ப்ரைஸ் அறிவிப்பு!

செவ்வாய், 8 மார்ச் 2022 (08:29 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி இன்று மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்