நித்தியானந்தா இந்தியா வரணும்னா சொல்றதை செய்யுங்க! – வீடியோ வெளியிட்ட சிஷ்யை!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:09 IST)
நித்தியானந்தா இந்தியா வரவேண்டுமென்றால் தாங்கள் கூறும் நிபந்தனைகளுக்கு காவல்துறை உறுதி அளிக்க வேண்டுமென பெண் சீடர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தனது பெண்கள் கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிரடியாக சென்று அவர்களது ஒரு பெண்ணை மீட்டு வந்துள்ளனர். மற்றொரு பெண் நந்திதா எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரிக்க ஆமதாபாத் ஆசிரமத்தை சேர்ந்த இரண்டு பெண் சீடர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தான் இமயமலையில் இருப்பதாக நித்யானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் நித்தியானந்தா இமயமலையில் இல்லை என்றும் எங்கோ வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர் தத்துவப்பிரியா வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் நித்தியானந்தா இந்தியா வர வேண்டும் என்றால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும், அவரையோ, என்னையோ கைது செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார். மேலும் ஏற்கனவே கைது செய்திருக்கும் இரண்டு பெண் சீடர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனைகளை காவல்துறையினர் ஏற்றுக்கொள்வார்களா என தெரியாத நிலையில் காணாமல் போன பெண் நந்திதா வெளிநாட்டில் நித்யானந்தாவோடு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் நித்யானந்தா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்