இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், பர்ஹன்பூரை சேர்ந்த சந்தீப் கவேலே என்ற தலித் இளைஞர் கோயிலுக்குள் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கோவில் கதவுகளை மூடியுள்ளனர். மேலும் சந்தீப்பிடம் திருமணத்திற்கான உரிய சட்ட அனுமதி இருந்தும் அங்கிருந்த கிராமத்தினர் கோவிலுக்குள் திருமணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக்கோட்ட அதிகாரி காசிராம் படோல் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளித்த தலித் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவலர்கள் அறிவித்துள்ளனர்.