முதலமைச்சர் நிதிஷ்குமார் தான். ஆனால்.. பாஜக வைக்கும் செக்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (16:18 IST)
சமீபத்தில் நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளைப் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 43 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமார் தான் முதலமைச்சர் என்று பாஜக கூறியுள்ளது. ஏற்கனவே பீகாரின் வளர்ச்சி பணிகள் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதிஷ்குமாரின் தலைமை தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒரு மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தும் முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக் கொடுத்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக, அமைச்சரவையில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் முக்கிய அமைச்சர் பதவிகளை பாஜகவினருக்கு தரவேண்டும் என்றும் பாஜக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது 
 
எனவே முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆக இருந்தாலும் அம்மாநிலத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பாஜகவினர்களாகவே இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்