மீண்டும் ஊரடங்கு அமல்? மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (13:04 IST)
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் இரவு நேர பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.
 
இதனைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், கொரோனா பரவும் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்