புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி 20 யுடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

புதன், 22 டிசம்பர் 2021 (11:48 IST)
மத்திய அரசு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் 20 யுடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்கியுள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021ன் படி  தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா யுடியூப் நிறுவனத்துக்கு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகவும், ஆதாரம் இல்லாமல் அவதூறு செய்திகளை பரப்புவதாகவும் 20 சேனல்கள் மீது புகார் கடிதம் கொடுத்திருந்தார்.

இந்த முடக்கப்பட்ட சேனல்களில் சில நயா பாகிஸ்தான் எனும் இயக்கத்துக்கு சொந்தமானவை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்