ஜம்மு-காஷ்மீர், ஒடிசாவிலும் பரவிய ஒமிக்ரான்: நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!

புதன், 22 டிசம்பர் 2021 (10:38 IST)
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வரும் நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவிலும் பரவியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிரா டெல்லி குஜராத் ராஜஸ்தான் உள்பட 13 மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கும் ஒரிசாவில் ஒருவருக்கும் ஒமிகிரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை மொத்தம் 220 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்