ஓமிக்ரான் எதிரொலி: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு கடிதம்!

புதன், 22 டிசம்பர் 2021 (10:24 IST)
ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஒமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 
 
மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
# ஓமிக்ரான் பரவலை தடுக்க உள்ளூர் மட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். 
# பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். 
# வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 
# கொரோனா அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 
# திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். 
# வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 
# அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்