நீட் வினாத்தாள் கசியவில்லை.! அரசியலாக்க வேண்டாம்.! மத்திய அமைச்சர் வேண்டுகோள்..!!

Senthil Velan
வியாழன், 13 ஜூன் 2024 (16:44 IST)
நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 
இரண்டாவது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
 
மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்த அவர்,  நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.  இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

ALSO READ: கிரிப்டோ கரன்சி முதலீடு..! ரூ.4 கோடி மோசடி..! ஒரு மாவட்டத்தையே அதிர வைத்த பெண்கள்..!
 
நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்