கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு! நீட் தேர்வு வழக்கில் அதிரடி முடிவு..!

Mahendran

வியாழன், 13 ஜூன் 2024 (11:20 IST)
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு வரும் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும் நீட் தேர்வின் புனித தன்மையில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், மோசடி, விடைத்தாள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் பிடிபட்ட நிலையில் அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
மேலும் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்