நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ராஜினாமா!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (12:15 IST)
புதுச்சேரியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 5 பேரும், திமுக எம்.எல்.ஏ ஒருவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
 
அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசிய நிலையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். அதை தொடர்ந்து நாராயணசாமி பேரவையை விட்டு வெளியேறினார். 
 
இந்நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா செய்துவிட்டார். மேலும், துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி வழங்கினார். புதுச்சேரி முதல்வர் தன் பதவியை  ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்