18 ஆண்டுகளில் முதல் விடுமுறை – மோடி இன் மேன் vs வைல்டு !

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:07 IST)
மோடி பங்குபெற்ற மேன் vs வைல்டு நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப் பட்டது.

பியர் கிரில்ஸ் உலகம் முழுவதும் பிரபலமான காடுகளுக்குள் சாகசப்பயணம் மேற்கொள்ளும் சாகசக் காரர். இவரின் சாகசப்யணங்களாக மேன் vs வைல்டு நிகழ்ச்சிகள் உலக அளவில் பிரசித்தம். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் மோடியுடன் செய்த சாகசப்பயண நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடன் பிரதமர் மோடி காடுகளுக்குள் மேற்கொண்ட சாகசப் பயண நிகழ்ச்சி நேற்று டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகியது. இதில் முதலில் அவர் இமயமலையில் இருந்து உத்தரகாண்ட் ஜிம் கார்பெட் பூங்காவுக்கு நடந்தே வர அதன்பின் அவருடன் இணைந்து கொண்டார் பிரதமர் மோடி.

இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட மோடி, ‘எனது 17ஆவது வயதில் வாழ்க்கையின் தேடலுக்காக இமயமலைக்கு வந்தேன். அதன் பின் பல முறை வந்துள்ளேன். பல ஞானிகளை இங்கு சந்தித்துள்ளேன். குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகளும், இந்தியாவின் பிரதமராக 5 ஆண்டுகளும் இருந்துள்ளேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குப் பிடித்த இடங்களுக்கு வந்துள்ளேன். 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இது’ எனக் கூறினார். முன்னதாக இந்த நிகழ்ச்சி புல்வாமா தாக்குதல் அன்று படம் பிடிக்கப்பட்டது என சர்ச்சைகள் எழுந்தன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்