சசிகலா சிஎம் ஆவது இப்படித்தானா? சிக்கிம்-ல் பாஜக நடத்திய அரசியல் ஆட்டம்!

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (15:52 IST)
சசிகலாவை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து அதே போல் சிக்கிமில் நடந்துள்ள சர்சையும் வெளிவந்துள்ளது. 
 
ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்தவர்கள் முதல்வராக தடை ஏதும் இல்லை என்கிற புதிய அரசியல் ஃபார்முலாவை கொண்டுள்ளது பாஜக. ஆம், சிக்கிம் மாநிலத்தில்தான் இந்த ஃபார்முலாவை செயல்படுத்தியும் உள்ளது. 
 
கடந்த 1996 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் கால்நடைத் துறை அமைச்சராக தமாங் பதவி வகித்த போது ஊழல் குற்றச்சாட்டில் ஒர் ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்தார். ஆனால், அவர் சிக்கிம் மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 
வழக்கம் போல எதிர்க்கட்சிகளோ, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக முடியாது என போர்கொடி தூக்கினர். ஆனால், தமாங்கின் கட்சி வெற்றி பெற ஆளுநர் அவருக்கு பதவி பிராமணமும் செய்து வைத்துவிட்டார். 
 
ஆனால், இப்போது தமாங் 6 மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இது சட்டப்படி எப்படி சாத்தியம்? என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த விவகாரம் எப்படி கொண்டு செல்லப்படுகிறதோ, அதே முறையில்தான் சசிகலா முதல்வராக்கப்படுவார். (சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என பாஜக உண்மையில் நினைத்தால் மட்டுமே...)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்