சசிகலாவுக்கு சிஎம் பதவி... பாஜக போடும் புது கணக்கு!!

சனி, 8 ஜூன் 2019 (12:04 IST)
வாக்கு பிரிபடாமல் அதிமுக - அமமுகவை இணைத்து அதனை பாஜவின் ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என பாஜக கணக்கு போட்டுள்ளதாம். 
 
அதிமுகவின் வாக்குகள் அதிமுக - அமமுக என பிளவுபட்டு இருப்பதால் வெற்றிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என நடந்து முடிந்த மக்களவை தேர்தல் அரசியல் கட்சி தலைவர்களுக்கு புரிந்திருக்கும். குறிப்பாக பாஜகவிற்கு சூப்பராக புரிந்துவிட்டது போல... 
 
எனவே, பாஜக இதை வைத்து புதிய கணக்கு ஒன்றை போட்டுள்ளதாம். அதாவது சசிகலாவிற்கு முதல்வர் பதவியை வழங்கி, ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடம் கட்சி பணிகளை வழங்கி இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கலாம் என பலே கணக்கு போட்டுள்ளதாம். 
 
அது எப்படி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக முடியாதல்லவா என நீங்கள் கேட்கலாம். ஆனால், நன்னடத்தை விதிகளின் படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டால் சசிகலா  உடனடியாக முதல்வர் பதவி ஏற்க எந்த தடையும் இருக்காதாம். 
 
ஆனால், அரசியல் எதார்த்தத்தில் இது எல்லாம் சாத்தியாமா? மக்கள் இதை ஏற்பார்களா என்பது கேள்விக்குறியே.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்