காஷ்மீரில் இன்று முதல் இண்டர்நெட் சேவை தொடக்கம்..

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (16:40 IST)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இணையத்தள சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்து மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில் இண்டர்நெட் சேவை, மொபைல் சேவை, ஆகியவை துண்டிக்கப்பட்டன. மேலும் வீதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், ராம்பன், கிஷ்த்லார், தோடா ஆகிய இடங்களில் மெல்ல மெல்ல இணையத்தள சேவை முடக்கம் தளர்த்தப்பட்டது. எனினும் மொபைல், இணையத்தள சேவை முடக்கம் பல மாவட்டங்களில் தொடர்ந்தது.

சமீபத்தில் குப்வாரா, பாரமுல்லா, ஆகிய பகுதிகளில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் முழுவதும் இணையத்தள சேவை வழங்ப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் காஷ்மீர் முழுவதும் இன்று முதல் 2ஜி மொபைல் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்