உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்தியா கூட்டணி மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் இஸ்லாமியர் ஆதரவுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும் அதனால் வரும் மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றும் எங்களைப் பொறுத்தவரை கூட்டணியால் நாங்கள் இழந்தது தான் அதிகம் எங்களுக்கு கூட்டணியால் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.