தேர்தல் தோல்வி எதிரொலி: மீண்டும் கட்சி பெயரை மாற்றும் சந்திரசேகர் ராவ்?

Mahendran

சனி, 13 ஜனவரி 2024 (17:31 IST)
தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை மாற்றிய நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக மீண்டும் பழைய பெயரையே வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்ற பெயராக சமீபத்தில் முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றினார். தமது கட்சி மாநில கட்சியாக இல்லாமல் தேசிய கட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயர் மாற்றப்பட்டது.

ஆனால் கட்சியின் பெயர் மாற்றிய பிறகு தான் தெலுங்கானா மாநிலத்தில் அக்கட்சி தோல்வி அடைந்தது என்பதும், சந்திரசேகரராவ் முதலமைச்சர் பதவியையும் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தற்போது மீண்டும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரையே மாற்ற அவரது கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் பெயர் மாற்றத்தை மக்கள் விரும்பவில்லை என்பதால் தான் தோல்வி கிடைத்தது என்று கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிஆர்எஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது சட்டமன்ற தொகுதிக்கு காரணம் என்று கூறப்படுவதால் மீண்டும் தனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்று மாற்ற சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்