மக்களவைத் தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜகவில் இப்போதே வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு தமிழர்கள் இருக்கும் நிலையில் இருவருமே தமிழகத்தில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
தென் சென்னையில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டாலும் அவர் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என பாஜக மேலிடம் விரும்புவதாகவும், அதனால் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் பாஜக செல்வாக்காக உள்ள தட்சிண கன்னடா என்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.