ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி

Siva

வெள்ளி, 12 ஜனவரி 2024 (08:14 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் பல அரசியல் தலைவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்றும்  சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவித்தார். 
 
நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பையே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் நிலைகுலைய செய்யும் என்றும்  ஒரே நாடு ஒரே திட்டத்தின் குழுவின் செயலாளர் நிதின் சந்திரா என்பவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.  
 
உண்மையான ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி உணர்வுக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்