அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி; கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளான மேட்ரிமோனி விளம்பரம்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (15:32 IST)
பெங்களூரில் திருமண வரன்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்று குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 
தற்போது ஆன்லைனில் வரம் பார்ப்பது எல்லோரிடமும் பரவலாக பரவி வருகிறது. சொந்தக்காரர்களை நம்புவதை விட மேட்ரிமோனி விளம்பரத்தை நம்பி வரன் பார்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பெங்களூர் இளம் சாதனையாளர்கள் என்ற அமைப்பு வரன்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. அதில் அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் இதற்கான அந்த அமைப்பை சாடியுள்ளனர். இதனால் நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர், நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துவிட்டார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி என்று சாதனையாளர்கள் பட்டியலின் கீழ் சேர்த்தது தப்புதான். நாடு முழுக்க இது விவாதமாகிவிட்டதால் எங்கள் நிகழ்ச்சிக்கு யாரும் வரமாட்டார்கள். எனவே நிகழ்ச்சியை ரத்து செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்