தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்.. நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபரின் தந்தை..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (08:22 IST)
நாடாளுமன்றத்தில் அத்துமீறி  நுழைந்து கலர் குப்பிகளை வீசியவரின் தந்தை சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மகன் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளரின் பகுதியில் அமர்ந்திருந்த இருவர் திடீரென எம்பிக்கள் இருக்கும் பகுதிக்கு சென்று அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் இதுகுறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு அத்துமீறியவர்களில் ஒருவர் மைசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நபர் ஒரு பொறியாளர் என்றும் இவரது பெயர் மனோரஞ்சன் என்றும் தெரியவந்துள்ளது. 
 
இந்த நிலையில் மனோரஞ்சனின் தந்தை இது குறித்து கூறிய போது தனது மகன் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்