நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு - எடப்பாடி பழனிசாமி கருத்து

புதன், 13 டிசம்பர் 2023 (15:53 IST)
மக்களவைக்குள் இன்று அத்துமீறி நுழைந்த இருவரால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள  நிலையில்,  இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற அதே தினத்தில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இருவர்  புகை குச்சிகளை கையில் ஏந்தி  சபா நாயகரை நோக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துமீறி நுழைந்த இருவரை அவையில் இருந்த எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.

மக்களவையில் இரண்டுபேர் அத்துமூறி  நுழைந்த நிலையில். நீலம், அன்மோல்ஷிண்டே ஆகிய இரண்டு பெண்களை டெல்லி காவல்துறையினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மேலும் 2 ஆண்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,’’ இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது  வேதனைக்குரியது.

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன்,  இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்