6 மணி நேரம் மட்டும் சிறையில் இருந்து வெளியே வந்த மணிஷ் சிசோடியா: என்ன காரணம்?

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (15:58 IST)
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் மணிஷ் சிசோடியா மனைவிக்கு உடல் பாதிப்பு அடைந்துள்ளதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்கு தனக்கு அனுமதி வேண்டும் என்று மணிஷ் சிசோடியா கோரிக்கை விடுத்த நிலையில்  அவருக்கு ஆறு மணி நேரம் அனுமதி வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டது

இதனை அடுத்து அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வந்து தனது இல்லத்திற்கு சென்று மனைவியை சந்தித்தார். மனைவியை தவிர அவர் வேறு எந்த நபரையும் சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் அவரது வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்