டெல்லியில் காற்று மாசுபாடு: வாகனங்களை இயக்க கட்டுப்பாடு..!

திங்கள், 6 நவம்பர் 2023 (15:57 IST)
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மாசுக்காட்டுப்பாட்டு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் கடும் மாசு  குறைபாடு ஏற்பட்டுள்ளதால் டெல்லி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
 
ஏற்கனவே டெல்லியில் நவம்பர் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனங்களில் ஒற்றைப்படை இரட்டைப்படை எண் முறை வரும் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
மேலும் காற்று மாசு தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.  
 
மேலும் ஆஸ்துமா இதய நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும்  காற்றின் தரம் குறைந்துள்ளதால் மக்கள் உடல் நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்