மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

Mahendran

புதன், 26 ஜூன் 2024 (16:05 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இன்று காலை ஒருவர் பலியானதால் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 91 பேர், சேலத்தில் 30 பேர், விழுப்புரத்தில் நான்கு பேர், புதுச்சேரி ஜிப்மரில் ஒன்பது பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 135 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இன்று காலை கருணாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் சற்றுமுன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதன் என்ற 62 வயது நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்