டெல்லியில் வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை.. அதிரடி அறிவிப்பு..!

வியாழன், 9 நவம்பர் 2023 (08:19 IST)
டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்து வருவதை அடுத்து வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காற்று மாசுபாடு காரணமாக டெல்லி நகரத்திற்குள் வெளி மாநில வாடகை கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளி மாநில வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே நகரத்தில் செல்ல அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே நவம்பர் 18 வரை டெல்லி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள  தற்போது சாலை ஓரமுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
மேலும் சி என் ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே டெல்லியில் அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்