போலீஸாரின் தொல்லை தாங்க முடியவில்லை…வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த குடும்பம்!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:55 IST)
ஆந்திராவில் போலிஸாரின் தொல்லை தாங்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளார் அப்துல் சலாம் என்பவர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவர் நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு நடந்த நகை திருட்டுக்கு அப்துல் சலாம்தான் காரணம் என நகைக்கடை உரிமையாளர் போலிஸாரிடம் புகார் கொடுக்க அவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. மேலும் அவரை போலிஸார் கொடுமைப் படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சலாம் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துள்ளார். ஆனாலும் போலிஸார் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் அவர் ஆட்டோவில் பயணம் சென்ற போது தான் வைத்திருந்த நகையைக் காணவில்லை என ஒரு நபர் புகார் கொடுக்க சலாமைக் கைது செய்துள்ளனர் போலிஸார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சலாம் மற்றும் குடும்பத்தினர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சலாமுக்கு நூர்ஜஹான் என்ற மனைவியும், சல்மா என்ற 15 வயது மகளும், 9 வயதில் கலந்தர் என்ற மகனும் இருந்தனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்