ஆடு திருடி சினிமா எடுத்து ஹீரோவான அண்ணன் தம்பி – உங்க கலைதாகத்துக்கு அளவே இல்லையே!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:10 IST)
சென்னை அடுத்த மாதவரத்தில் ஆடு திருடிய அண்ணன் தம்பி இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையை அடுத்த மாதவரம் பகுதிக்கு அருகே உள்ள மஞ்சம்பாக்கம் ரிங் சென்டர் பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக குற்றச்சாட்டிலள் எழுந்துள்ளன. இதையடுத்து மாறு வேடத்தில் இருந்த போலீஸார் திருடர்களைப் பிடிக்க காத்திருந்தனர். இதையடுத்து ஒருநாள் காரில் வந்து இருவர் கீழே இறங்கி சாலையில் படுத்திருந்த ஆட்டை திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நிரன்ஜன் மற்றும் அவரது தம்பி லெனின் குமார் எனத் தெரிய வந்துள்ளது. இதுபோல தொடர்ச்சியாக ஆடுகளைத் திருடி கிடைக்கும் பணத்தைக் கந்து வட்டிக்கு விட்டு அதன் முலம் பெருகிய பணத்தில் நீதான் ராஜா என்ற படத்தை எடுத்து அதில் இருவரும் கதாநாயகர்களாகவும் நடித்துள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது.  இதையடுத்து இருவரும் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்