கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: போலீஸுக்கு முதல்வர் மம்தா கெடு..!

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (16:38 IST)
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ள நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போலீசுக்கு கெடு விதித்துள்ளார். ஆகஸ்ட் பதினெட்டாம் தேதிக்குள் வழக்கை முடிக்க தவறினால் வழக்கின் விசாரணையை சிபிஐ இடம் ஒப்படைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
 
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை நேரில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’மருத்துவரின் குடும்பம் விரும்பினால் இந்த கொலை வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்க தயார் என்றும் சிபிஐ விசாரணை செய்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 
மேலும் மாநில காவல் துறைக்கு அவர் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை கெடு விதித்து இருப்பதாகவும் அதற்குள் குற்றவாளியை கண்டுபிடிக்க விட்டால் சிபிஐ வசம் ஒப்படைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதனை அடுத்து கொல்கத்தா மருத்துவ கல்லூரி முதல்வர் சந்திப் போஸ் என்பவர் இன்று பதவியை ராஜினாமா செய்தார்.
 
இறந்து போன மருத்துவர் என் மகள் போன்றவர் தான் என்றும் ஒரு பெற்றோராக நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை என்றும் அவர் ராஜினாமாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்