2024ல் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: மம்தா பானர்ஜி

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (18:20 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும்போது 3 முதல் 4 அமைப்புகளை வைத்துக்கொண்டு மாநில அரசுகளை தங்கள் வசம் எடுத்துக் கொள்வதே வேலையாக இருக்கிறது என்றும் மகாராஷ்டிரத்தில் அப்படித்தான் ஆட்சியை எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறினார் 
 
ஆனாலும் வங்காளம் அவர்களை தோற்கடித்து விட்டது என்றும் வங்காளம் உங்களுக்கு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றும் அதற்கு முதலில் நீங்கள் ராயல் வங்காளப் புலிகள் உடன் மோத வேண்டும் என்றும் கூறினார்
 
2024 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரவே வராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனை வேலையில்லா திண்டாட்டம் ஆக இருப்பதால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்