ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த மம்தா பானர்ஜி அரசு.. தொடரும் பிரச்சனைகள்..!

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (10:00 IST)
மேற்குவங்கத்தில்  ராகுல் காந்தியின் பொதுக் கூட்டங்களுக்கு  மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க மாட்டோம் என்றும் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போகிறோம் என்றும் மம்தா பானர்ஜி  கூறியிருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் அம்மாநிலத்தில் சில இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் அனுமதி கேட்டதாகவும் ஆனால் மம்தா பானர்ஜியின் அரசு அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.  

ஏற்கனவே மணிப்பூர், அசாம்  மாநிலங்களில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு சில தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது கூட்டணி கட்சியான  மம்தா பானர்ஜி ஆளும் மாநிலத்திலேயே ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்