பிரதமர் நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்க்கட்சி முதல்வர்களை பேசவே விடவில்லை என்றும் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு பணிகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி கையிருப்பு போன்றவை குறித்து ஒரு வார்த்தைக் கூட பிரதமர் பேசவில்லை. கருப்பு பூஞ்சை தொற்று பற்றியும் பேசவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.