கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:31 IST)
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. 

 
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கவில்லை.   
 
இறப்பு விகிதத்தையும் பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கான சிகிச்சைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என டெல்லி மருத்துவர் ஒருவர் கூறினார். ஆம், கொரோனாவிலிருந்து ஒருவரை குணப்படுத்தும் விகிதம் ரெம்டெசிவிர் மருந்துகளில் குறைவாக இருப்பதால், விரைவில் இதற்கு தரப்படும் முன்னுரிமை குறையும் என்றும் இதன் விநியோகம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டெல்லியை சேர்ந்த கங்காராம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ராணா கருத்து தெரிவித்தார். 
 
இவர் கூறியது போல தற்போது, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்