பெண் வேடமிட்டு டான்ஸ் ஆடி சேட்டை செய்யும் சேட்டன்கள்! – வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (19:47 IST)
ஓணம் பண்டிகையை கொண்டாட ஆண்கள் சிலர் கேரளத்து பெண்கள் போல வேடமிட்டி டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் ஓணம் பண்டிகை தேசிய அளவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கேரளாவை தொடக்கமாக கொண்ட பண்டிகை என்றாலும் தமிழகத்தில் ஈரோடு, கரூர், கோயம்புத்தூர் பகுதிகளிலும் ஓணம் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ஆண்கள் சிலர் வித்தியாசமான முறையில் ஓணம் கொண்டாடும் வீடியோ வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஓணத்திற்கு கேரளாவில் பெண்கள் மரபாக அணியும் முண்டு பாணியில் புடவை அணிந்து, தலையில் பூ வைத்து, கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டு, மலையாள பாடல் ஒன்றுக்கு அவர்கள் டாண்ஸ் ஆடும் காட்சி பார்ப்போரை சிரிக்க வைக்கிறது. அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஒருவர் ”உங்கள் அலுவலகத்தில் பெண்கள் இல்லை. ஆனால் ஓணம் கொண்டாட வேண்டுமென்றால்.. இப்படித்தான் நடக்கும்” என்று கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்