மோடியின் கடந்த ஆட்சியின் போது, மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்கும் வண்ணம் “சுவச் பார்த்” (தூய்மையான இந்தியா) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் படி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கிராமங்களில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது எனவும், நாட்டில் 98 % கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சாதனைக்காக, அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மெலிந்தா அறக்கட்டளையின் “குளோபல் கோல்கீப்பர்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வரும் 24 ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விருதினை குறித்து பிரதமர் மோடியை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.