வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை..!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (10:53 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதை அடுத்து நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடமேற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது 
 
இதன் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழையும் சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வங்க கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இருப்பினும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்