தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி, 24 ஜூன் 2023 (14:30 IST)
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கூட சில பகுதிகளில் மழை பெய்து வந்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. எனவே மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்