வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: வானிலை அறிவிப்பு..

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (09:07 IST)
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இது வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்  வடமேற்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  
 
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்