ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சி கூண்டோடு காலி.. 22 மூத்த தலைவர்கள் ராஜினாமா..!

Mahendran
வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:21 IST)
பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தலைமையில்  லோக் ஜனசக்தி என்ற கட்சி இயங்கி வரும் நிலையில் இந்த கட்சியில் உள்ள 22 மூத்த தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
 
லோக் ஜனசக்தி கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில்,  சீட்டு ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த பல தலைவர்கள் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
 
முதல்கட்டமாக மூத்த தலைவர் அருண்குமார் என்பவர் ராஜினாமா செய்ததையடுத்து,  இதுவரை 22 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
 
சீட்டு ஒதுக்கீட்டில் கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள மூத்த தலைவர்கள், சீட்டு ஒதுக்கீட்டில் பணப் பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறி வருகின்றனர்,.
 
இந்த நிலையில் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகிய அனைவரும் பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்