கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு ஆகஸ்ட் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பெங்களூரில் பரவி வருவதை அடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பெங்களூர் பெங்களூரில் 1769 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது