சுதந்திர தினத்தன்று ஊரடங்கு கிடையாது - கேரள மாநில அரசு

புதன், 4 ஆகஸ்ட் 2021 (18:09 IST)
கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று  வருகிறது. அவரும்சுந்ததிர தினத்தன்றும், ஓணம் பண்டிகை தினத்தன்றும் ஊரடங்கு இல்லை என கேரள அரவு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது.

இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

விரையில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் சுதந்திர தினதன்றும்( ஆகஸ்ட் -15) , ஓணம் பண்டிகை( ஆகஸ்ட்-22 )  நாளன்றும் ஊரடங்கு கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்