இனி மதுகுடிப்போருக்கான வயது வரம்பு உயர்வு!!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (16:57 IST)
கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 
 
கேரளாவில், பினராயி தலைமையிலான மாநில அரசு, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் மதுகுடிப்போருக்கான 21 வயது என்பதை 23 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து கேரளாவில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி 730 பார்கள் மற்றும் மது கடைகள் மூடப்பட்டன.
 
இந்நிலையில் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி மதுவிலக்கை வாபஸ் பெற அலோசனை செய்தது. அதன் படி கடந்த ஜூன் மாதம் கேரளாவில் இருந்த மது விலக்கு வாபஸ் பெறப்பட்டது. 
 
கேரளாவில் மது குடிப்போருக்கான வயது 21 லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் சிறு வயதிலேயே மதுகுடிக்க துவங்கிவிடுவதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்