ஓகி புயல் எதிரொலி: 270 மீனவர்கள் மாயம்; கேரளாவையும் விட்டுவைக்காத சோகம்!!

வெள்ளி, 1 டிசம்பர் 2017 (12:53 IST)
கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள ஓகி புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஓகி புயலின் தாக்கம் கேரளாவையும் ஆட்டிப்படைத்துள்ளது. 
 
ஓகி புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக திருவனந்தபுரம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளது. மழை காரணமாக 4 பேர் உயிர் இழந்து உள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
புயல் காரணமாக 4.2 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழும்பும் என்றும், 120 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்தது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி அறிவுருத்தப்பட்டனர். 
 
ஆனால், கடலுக்கு சென்ற 270 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. இதனால், தேசிய பேரிடர் மீட்பு குழு, கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்