ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடற்கரையில் இலட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதை அடுத்து இயற்கை சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட போகிறதா? என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஒரு சில கடற்கரைகளில் கடலில் இருந்த லட்ச கணக்கான மீன்கள் கரை ஒதுக்கி உள்ளன
கரை ஒதுங்கிய அந்த மீன்கள் துள்ளியபடியே இறந்து வருவதை காணும் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக கடல் சீற்றம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது மட்டுமே மீன்கள் கரை ஒதுங்கும் என்றும் அது போன்ற ஏதேனும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுமோ என்று அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இயற்கை பேரிடரின் கணிப்பின்படி எந்த விதமான பூகம்பமோ அல்லது சுனாமியோ ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.