கன்னட மொழி கோப்புகளுக்கு மட்டுமே அப்ரூவல்: குமாரசாமி கரார்!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (14:29 IST)
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வாய்மொழியாக பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு, 
 
கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கர்நாடகா தனி மாநிலமாக‌ உதயமானது. இந்த நிகழ்வை கர்நாடக அரசு ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை மாநில உதய தினமாக (ராஜ்யோத்சவா) கொண்டாடி வருகிறது. 
 
இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தை ஒட்டி இந்த ஆண்டு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் குமாரசாமி. அதாவது, வருகிற‌ நவம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடக மாநில‌ உதய தினத்தில் இருந்து கன்னட மொழிக்கும் கன்னடர்களுக்கும் நூறு சதவீத‌ம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 
அன்று முதல் கன்னட மொழியில் இல்லாத பிற மொழிகளில் இருக்கும் மாநில அரசு கோப்புகளை பார்க்க மாட்டேன். கன்னட மொழியில் இருக்கும் கோப்புகளை மட்டும் பார்த்து கையெழுத்திடுவேன். கன்னடத்தில் இல்லாத கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்ப வேண்டும் என வாய்மொழி உத்தரவை பிரப்பித்துள்ளார். 
 
இந்த உத்தரவிற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், கன்னடத்தை தாய்மொழியாக கொண்டிருக்காதவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்