காவல் நிலையத்தில் கைதிகள் அரை நிர்வாண நடனம்!!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (16:04 IST)
கேரள மாநிலத்தில் ஈவ்-டீசிங் செய்த வாலிபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களை அரை நிர்வாணமாக நடனமாட வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 
கேரள மாநிலம் மலரப்புரம் அருகே தனுர் காவல் நிலையத்தில், பெண்களை கேலி செய்ததாக மூவரை கைது செய்து அழைத்து வந்து காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர், கைதிகளின் மேலாடைகளை கழற்றிவிட்டு கைகளை தட்டிக் கொண்டே நடனம் ஆடுமாறு வற்புறுத்தியுள்ளார். கைதிகளும் அவ்வாரே செய்துள்ளனர். 
 
இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவை கண்ட பலர் காவலர்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்தவுடன் மாவட்ட காவல் அதிகாரி மற்றும் காவல் ஆய்வாளர்கள் மீது விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்